TNPSC GEOGRAPHY TOPIC ABOUT SEVEN CONTINENTS AND EARTH

புவியியல்
நாம் வாழும் பூமி
TNPSC GEOGRAPY IMPORTANT TOPICS

♣ கடல்கள் இன்றித் தொடர்ச்சியான அகண்ட நிலப்பரப்புகள் தான் கண்டங்கள் எனப்படுகின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என மொத்தம் ஏழு கண்டங்கள் உலகில் உள்ளன. 

♣ மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் ஆகியவை பூமியின் முக்கிய நில அமைப்புகள் ஆகும். உயரமான முகடுகளுடன் கூடிய நில அமைப்பே மலை. பல மலைகள் தொடர்ச்சியாக அமையும்போது அது மலைத்தொடர் என வழங்கப்படுகிறது. உலகில் மிக உயரமான மலைத்தொடர் இமயமலைத் தொடர் ஆகும்.

♣ சுற்றியுள்ள நிலப்பகுதிகளைவிடச் சற்றே உயரமாகவும் அதன் மேற்குப்பகுதி தட்டையாகவும் உள்ள நிலஅமைப்பு பீடபூமி எனப்படுகிறது. திபெத் பீடபூமிதான் உலகின் மிக உயரமான பீடபூமி ஆகும்.

♣ பரந்து விரிந்த தாழ்வான சமமான நிலப்பரப்பு சமவெளி எனப்படுகிறது. கங்கை ஆறு பாயும் வட இந்தியப் பகுதி உலகின் முக்கிய சமவெளிகளில் ஒன்று.

ஏழு கண்டங்கள் :

ஆசியா :

➻ ஏழு கண்டங்களில் மிகப் பெரியது ஆசியா.
➻ இது பூமியின் வடஅரைக்கோளத்தில் உள்ளது.
➻ கோபி குளிர்ப்பாலைவனம், உயரமான இமயமலைத்தொடர் முதலியவை இக்கண்டத்தில் உள்ளன.

ஆப்பிரிக்கா :

➻ பரப்பளவில் இது இரண்டாவது பெரிய கண்டம் ஆகும்.
➻ இந்தக் கண்டம் வடஅரைக்கோளத்திலும், தென் அரைக்கோளத்திலும் பரவியுள்ளது.
➻ நிலநடுக்கோடு இந்தக் கண்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது.
➻ உலகின் மிக நீளமான நைல் நதி (6695கி.மீ.) இக்கண்டத்தில் பாய்கிறது. 
➻ மிகப் பெரிய பாலைவனமான சகாரா பாலைவனம் இக்கண்டத்தில் தான் உள்ளது.
➻ அடர்ந்த காடுகள் மற்றும் கனிம வளங்களின் செறிவுமிக்கது இக்கண்டம்.

வட அமெரிக்கா :

➻ அட்லாண்டிக், பசிபிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்களால் சூழப்பட்ட கண்டம் இது.
➻ இதன் மேற்குப் பகுதியிலுள்ள ராக்கி மலைத்தொடர் மிக நீண்ட மலைத்தொடர் ஆகும்.

தென் அமெரிக்கா :

➻ இக்கண்டம் பெருமளவு தென் அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. 
➻ உலகின் நீளமான ஆண்டிஸ் மலைத்தொடர் இந்தக் கண்டத்தில்தான் உள்ளது.
➻ உலகின் மிக அகன்ற அமேசான் ஆறு (6586.கி.மீ. நீளம்) இக்கண்டத்தில் உள்ளது.

ஐரோப்பா :

➻ ஆசியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கண்டம் இது.
➻ ஆல்ப்ஸ் மலைத்தொடர் இக்கண்டத்தில்தான் உள்ளது.

ஆஸ்திரேலியா :

➻ நான்கு பக்கமும் கடல்களால் சூழப்பட்ட ஆஸ்திரேலியா ஒரு தீவுக் கண்டம் ஆகும். 
➻ இக்கண்டம் நியூசிலாந்து, பிஜி போன்ற பல தீவுகளைக் கொண்டது. 
➻ பிஜித் தீவுகள், பாப்புவா, நியூகினியா முதலிய தீவுகள் பொதுவாக ஒசியானியத் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. 
➻ கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப் பாறை ஆஸ்திரேலியக் கடற்கரையில் உள்ளது.

ANTARTICA:

98 % COVERED WITH ICE