டி.என்.பி.எஸ்.சி. தேர்வு
விண்ணப்பதாரர்கள் வசதிக்காக புதிய தொலைபேசி எண்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள அறிக்கை 02.12.2017
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, அவர்களது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளிக்க புதிதாக 5 தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்துகிறது. அந்த தொலைபேசி எண்கள் வருமாறு:- 25300336, 25300337, 25300338, 25300339 மற்றும் 25300340.
இவ்விணைப்புகள் தவிர, தற்போது நடைமுறையில் உள்ள பொது விசாரணைக்கான தொலைபேசி எண்களான 25332833, 25338855 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி இணைப்பான 1800 425 1002 ஆகிய எண்களையும் பயன் படுத்திக்கொள்ளலாம்.
குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இந்த தொலைபேசி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன்மூலம் கடைசி நேர விண்ணப்ப சமர்ப்பித்தலை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது