10 IMPORTANT INFORMATION FOR CCSE 4 EXAM
1. திருப்புதல் மட்டுமே செய்ய வேண்டும்.புதிய பாடங்களைப் படிக்கக் கூடாது.
** அப்படியே படித்தாலும் மனதில் நிற்காது, வீண்தான்.
** திருப்புதல் செய்யும் பொழுது நன்றாக மனதில் நிற்கும் பாடங்களை பிறகும் , கொஞ்சம் மறப்பதாக நினைக்கும் பாடங்களை இப்பொழுதும் செய்யலாம்.
2. மொழி பாடத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஏற்கனவே நன்றாகப் படித்து இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். அதுவே வெற்றியைத் தரும்.
3. தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் நடப்பு நிகழ்வுகள் , ஒரு மணி நேரம் கணக்கு படிக்க வேண்டும்.
4. மிக நன்றாக நினைவில் இருக்கும் பாடங்களை மிக விரைவாகவும் , மற்ற பாடங்களை தேவையான நேரம் எடுத்தும் திருப்புதல் செய்ய வேண்டும்.
5. இரண்டே இரண்டு மாதிரித் தேர்வுகள்:
வினாத் தாளை பிரிண்ட் எடுத்து OMR சீட் வைத்துக் கொண்டு, TNPSC தேர்வு போல் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை இரு நாட்கள் இடைவெளியில் எழுதிப் பார்க்கவும்.
ஆன்லைன் டெஸ்ட் எழுத்துறதை விட இதுவே மிகுந்த பலன் தரும்.
6. நாம சாப்பிட்ட வயிறு நிறையும்ன்னு நம்புற நீங்க, நிச்சயம் நல்ல உழைப்பைக் கொடுத்து இருந்த வெற்றி வரும்ன்னு நம்பணும்.
அதனால தேவை இல்லாத பதட்டம் , கவலையை வைத்துக் கொண்டு உங்கள் வெற்றிக்கு நீங்களே வேட்டு வச்சுடக் கூடாது.
"நம்மை அரசு ஊழியராக்கப் போகும் தேர்வு இது" என்ற உற்சாகத்துடன் இருங்கள்.
7. வாகனப் பயணங்களில் பொறுமையா போயிட்டு வரணும்.
வண்டி ஒட்டுறப்போ எக்ஸாம் பத்தி , சப்ஜெக்ட் பத்தி நினைச்சுட்டு போக கூடாது.
8. காரமில்லாத எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.
வயிற்று உபாதைகளைத் தரக் கூடிய எண்ணெய் உணவுகள், மற்றும் ஜலதோஷம் உண்டாக்கக் கூடிய குளிர் உணவுகள் கூடாது.
9. முக்கியமாக தேர்வு பற்றிய எவ்வித சிந்தனையும் இல்லாமல் நன்றாகத் தூங்க வேண்டும்.
இந்த ஒருவாரம் தூக்கத்தைத் தவிர்த்தால் தேர்வு சமயத்தில் மந்தமாக உணர்வீர்கள்.
தேர்வு நாளன்று சுறுசுறுப்பு முக்கியம்.அதற்க்கு இப்பொழுது இருந்தே குறைந்தது 8 மணி நேரம் நன்றாகத் தூங்கிப் பழக வேண்டும்.
இது படிப்பதை விட ரொம்ப முக்கியம்.
10. சக போட்டியாளர்களை ரொம்ப உயர்வாக நினைத்து பதட்டத்தையும் கவலையையும் உருவாக்கிக் கொள்ளக் கூடாது, அல்லது உங்களை மிக உயர்வாக நினைத்து மெத்தனப் போக்காகவும் இருக்கக் கூடாது.
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
அதுவே வெற்றியைத் தரும்.
வாழ்த்துக்கள்