GENERAL AWARENESS SCIENCE QUESTIONS FOR RRB GROUPD RRB NTPC EXAMS SI POLICE TNPSC EXAMS

டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை
முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா
நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்
மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்
அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு
பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்
விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ்சுரப்பி
நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்
இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி
தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்
எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்
ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்
விலங்குகளின் உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு
அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி
மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.
நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடையில் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்
நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்
சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்
நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.
கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி
மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்
செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்
உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்
செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்
பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்
புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்
புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்
மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்
ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.
பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்
கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு
கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்
தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று
களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்
கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்
ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்
புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா
தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான்
எஸ்குலண்டம்
தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)
தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்