நாடகங்களும் நாடக ஆசிரியர்களும் TNPSC TAMIL

நாடகங்களும் நாடக ஆசிரியர்களும்

நாடக எழினி (திரைச்சீலைகள்) 3 வகைப்படும்: அவை ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி.
தஞ்சையில் சரபேந்திர பு பாளக் குறவஞ்சி நாடகம் நடத்தப்பட்டது.
இரத்தக்கண்ணீர், சீதக்காதி நொண்டி நாடகம் போன்ற நாடகங்கள் நொண்டி நாடக வகையைச் சார்ந்தவை.
அரிச்சந்திரன், கோவலன், வள்ளி திருமணம், தேசிங்குராஜன் போன்ற நாடகங்களை தொ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் எழுதியுள்ளார்.
சிலப்பதிகாரம் 11 வகை ஆடல்களையும், 8 வகை கூத்துகளையும் (அரங்கேற்று காதை) கூறுகிறது.
தொ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் அவர்கள் பால மனோகரா சபாவை நிறுவியவர் ஆவார்.
டி.கே.சண்முகம், டி.கே.சங்கரன், டி.கே.முத்துச்சாமி, டி.கே.பகவதி ஆகிய நால்வர் நாடகக் கலைமணி என்னும் சிறப்பை பெற்றவர்கள்.
கூத்தாட்(டு) அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று - என்று திருவள்ளுவர் நாடக அரங்கு பற்றி கூறியுள்ளார்.
நாடக இயல் என்னும் நு}லை எழுதியவர் பரிதிமாற் கலைஞர்.
சாகுந்தல நாடக ஆராய்ச்சி என்னும் நு}லை எழுதியவர் மறைமலையடிகள்.
நாடகத் தமிழ் என்னும் நு}லை எழுதியவர் பம்மல் சம்பந்தனர்.
குலோத்துங்கச் சரிதை என்பது முதலாம் குலோத்துங்கன் பற்றிய நாடகம்.
அறிஞர் அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்னும் நாடகத்தை எழுதியவர்.
சிற்றிலக்கியங்களில் குறவஞ்சி, பள்ளு போன்றவை நாடகத்தன்மை உடையன.
இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில் நாடகம் ஒன்றாக உள்ளது.
முற்கால நாடகக்கலையின் தொடக்கம் பரப்பாவைக் கூத்து.
தமிழ் நாடக மறுமலர்ச்சியின் தந்தை எனப் சிறப்பை பெற்றவர் கந்தசாமி.
புதிய நடிப்புக்கலை ஆசிரியர் எனப் சிறப்பை பெற்றவர் கந்தசாமி.
எம்.கந்தசாமி அவர்கள் மேனாட்டு நாடகமுறைகளைத் தமிழில் புகுத்தியவர்.
தொல்காப்பியர் முதன்முதலில் நாடகம் என்ற சொல்லை பயன்படுத்தியவர்.
முழுவதும் வசனத்தில் அமைந்த முதல் நாடகம், பிரதாப சரித்திர விலாசம். இதனை எழுதியவர் திண்டிவனம் ராமசாமி.
பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்பட்டவர்.
கிரேக்கத்தில் எலுகீனியன் மத விழாவில் ஆடிய நடனங்கள் நாடகக் கலையைத் தோற்றுவித்திருக்கின்றன.
கிரேக்க நாடக ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ்கிலஸ், சோபக்ளீஸ், யு ரிப்பிட்டீஸ், அரிஸ்ட்டோஃபேன்ஸ் ஆகிய நால்வருமாவர். கிரேக்க நாடக ஆசிரியர்கள் பெரும்பாலும் துன்பியல் நாடகங்களையே விரும்பி எழுதினர்.
எகிப்தில் ஒசைரிஸ் என்ற கடவுளுக்குச் செய்யப்படும் வணக்கத்திலிருந்து நாடகம் தோன்றியது.
தமிழ் நாடகத்தின் தந்தை - பம்மல் சம்பந்தனார்
பம்மல் சம்பந்தனார் மொத்த நாடகங்கள் தொண்ணுற்று மூன்று ஆகும்.
தமிழ் நாடகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். மேலும் இவரைத் தமிழ் சேக்ஸ்பியர் என்றும் அழைப்பர்.
கூத்தாடி என்ற பெயரை நீக்கியவர். இவர் நீதிபதியாக பணியாற்றியவர்.
தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர்.
இவர் தனது 18 ம் வயதில் 1891 ஆம் ஆண்டு சுகுணவிலாச சபையை தொடங்கினார்.
இவர் தனது 18 வயதில் புஷ்பவல்லி என்னும் முதல் நாடகத்தை எழுதினார். இவர் நடிகர்களால் கலைஞர் என மதிக்கப்பட்டார்.
மனோகரா, கர்ணன், யயாதி, சிறுதொண்டன், சபாபதி, பொன்விலங்கு போன்ற 90 க்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் இயற்றியுள்ளார்.
வேதாள உலகம், ரத்னாவளி, கள்வர் தலைவன், சபாபதி, இரண்டு நண்பர்கள் முதலிய நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.
வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
எழுபது ஆண்டுகளாகத் தமிழ் நாடக மேடையில் இவரது மனோகரன் நாடகம் புகழ்பெற்று விளங்கியது.
இவர் சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி வாணிபுரத்து வணிகன், விரும்பிய விதமே, அமலாதித்தியன், மாக்பெத், சிம்பெலின் முதலிய தமிழ் நாடகங்களைப் படைத்துள்ளார்.
இவர் கேளிக்கை நாடகம் என்ற வகையியையும், நாடக நையாண்டியினையும் தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தினார்
இவர் தம் நாடகங்கள் இன்பியல், துன்பியல், கேளிக்கை, அங்கதம், நையாண்டி, புராணிகம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்டவையாகும்.
விருதுகளும் சிறப்புகளும்
22வது வயதில் அவருடைய முதல் நாடகம் லீலாவதி-சுலோசனா என்ற பெயருடன் அரங்கேறியது.
மொத்தம் 80 நாடகங்கள் எழுதினார்.
1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது
1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்.
1963 இல் பத்மபு ஷண் என்ற பட்டத்தையும் பெற்றார்.
தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்.