TNPSC ABOUT THIRU V KALYAN SUNDRAM
INFORMATION ABOUT THE THIRU V KA
✍ திரு.வி.கலியாணசுந்தரனார் பெற்றோர் விருத்தாச்சலனார் மற்றும் சின்னம்மையார் ஆவர். இவரது மனைவி கமலாம்பிகை ஆவார்.
✍ இவர் பிறந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் (தற்போது தண்டலம்).
✍ இவரது காலம் 26-08-1883 முதல் 17-09-1953 வரை ஆகும்.
✍ திரு.வி.கலியாணசுந்தரனார் இயற்றிய நு}ல்கள் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு போன்றவை ஆகும்.
✍ இலக்கிய வாரிசுகள் கல்கி, மு.வ ஆகும்.
✍ இவரின் சிறப்புப்பெயர்கள் தமிழ்த்தென்றல், தமிழ்சோலை ஆகும்.
✍ திரு.வி.க என்பது திருவாரூர் விருத்தாச்சல மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் சுருக்கம் ஆகும்.
✍ இவர் தொழிலாளர் நலனுக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.
✍ மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்.
✍ இவர் தேசபக்தன் எனும் இதழின் ஆசிரியராக இருந்தவர்.
✍ நவசக்தி என்னும் பத்திரிக்கையை தொடங்கியவர்.
✍ இவரின் தமிழ் நடையைப் போற்றி திரு.வி.க. எனச் சிறப்பிக்கப்படுகிறார்.
✍ சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
✍ தமிழ் இலக்கியம், சைவ சித்தாந்தத்தினை கதிரை வேலனாரிடம் கற்றார்.
✍ 'கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம்" பேசுவதில் வல்லவர்.
✍ கலியாண சுந்தரனார் பேச்சால் தமிழ் வளர்த்த பெருமகனார்.
✍ 'உரைநடை எழுதுதல் எனது தொழில்" எனக் கூறியுள்ளார்.
✍ திரு.வி.க.வின் தமிழ்நடையை மலை எனக் கூறியவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவர்.
✍ 'மொழி இறந்துபடின் நாடும் இறந்துபடும் அன்றோ" எனக் கூறியவர்.
✍ இவர் 1918 ல் இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் சென்னையில் தோற்றுவித்தார்.