மின்சாரவியல் தொடர்பான வினாக்கள்
PHYSICS QUESTIONS FOR TNPSC
ELECTRICITY TOPIC IMPORTANT QUESTIONS
1. மின்னோட்டம் செல்லும்போது பொருள் காந்தமாக்கப்பட்டால், அது - மின்காந்தம்
2. மின் உருகு இழை என்பது - கண்ணாடி அல்லது செராமிக் பொருளினுள் வைக்கப்பட்ட ஒரு கம்பியாகும்.
3. மின்மோட்டார், தந்திக்கருவி, தொலைபேசி, மின்சாரமணி போன்ற சாதனங்களில் பயன்படுகின்றன- மின்காந்தங்கள்
4. மின்னோட்டத்தால் ஏற்படும் வெப்ப விளைவின் அடிப்படையில் செயல்படுகிறது. - மின் உருகு இழை
5. கண்களில் தவறி விழும் இரும்புத்தூள் போன்ற காந்தப் பொருளை வெளியே எடுக்க மருத்துவர்கள் பயன்படுத்துவது- சிறிய மின்காந்தங்கள்
6. வீணான பொருட்களின் குவியலில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க பயன்படுகின்றன. - மின்காந்தங்கள்
7. அதிகப்படியான மின்னோட்டம் செல்லும்போது சாதனங்கள் சேதமடையாமல் தடுக்க பயன்படுத்தப்படுகிறது. - மின் உருகு இழை
8. நிக்ரோம் என்பது - நிக்கல் மற்றும் குரோமியம் சேர்ந்த உலோகக் கலவை
9. தன் வழியே மின்னோட்டத்தைப் போக அனுமதிக்கும் பொருள்கள் - கடத்திகள்
10. கடத்திகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுத் தருக. - தாமிரம், இரும்பு போன்ற எல்லா உலோகங்கள், மனித உடல், புவி.
11. தன் வழியே மின்னோட்டத்தைப் போக அனுமதிக்காத பொருள்கள் - மின்காப்புப் பொருள்கள்
12. மின்காப்புப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுத் தருக. - பிளாஸ்டிக், மரம், இரப்பர், கண்ணாடி.
13. மின்சாரத்தை உருவாக்கவல்ல மீன் - மின் விலாங்கு மீன்
14. இவ்வகை மீன்கள் எங்கு அதிகமாக காணப்படுகின்றன. - அமேசான் நதி, தென் அமெரிக்காவில் உள்ள ஓரினோக்கொ நதிப்படுகை
15. மின் உருகு இழையானது அதன் வழியே செல்லும் மின்னோட்டம் குறிப்பிட்ட உள்ளபோது உருகிவிடும். - பெரும மதிப்பை விட அதிகமாக