INFORMATION ABOUT THE UNITED STATES ORGANIZATION
1. ஐ.நா. சபை என்பதன் முழுபெயர் என்ன? ஐக்கிய நாடுகள் சபை (United Nations - UN)
2. ஐ.நா. சபை ஏன் உருவானது?இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி , பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்க உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்டது.
3. அட்லாண்டிக் சார்ட்டரே என்றால் என்ன? உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள்.
4. அட்லாண்டிக் சார்ட்டரே என்று உருவாக்கப்பட்டது? 14.08.1941
5. 1941-இல் உருவான அட்லாண்டிக் சார்ட்டரில் கையெழுத்திட்டவர்கள் யார், யார்? அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
6. ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது? இலண்டன்
7. ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது? 1946
8. ஐ.நா. சபைக்கு அப்பெயரை வைத்தவர் யார்? பிராங்ளின் ரூஸ்வெல்ட்
9. ஐ.நா சபை உருவாவதற்கு முன்பு சர்வதேச அளவில் அமைதிக்காகச் செயல்பட்ட அமைப்பு எது? லீக் ஆப் நேஷன்ஸ்
10. லீக் ஆப் நேஷன்ஸ் உருவான ஆண்டு எது? 1920
11. ஐ.நா பொதுச்சபைக்கு ஒரு நாடு அதிகபட்சமாக எத்தனை பிரதிநிதிகளை அனுப்பலாம்? 5
12. ஐ.நா சபை அமைப்பில் இருந்து முதன்முதலாக வெளியேற்றப்பட்ட நாடு எது? யூகோஸ்லோவியா
13. ஐ.நா சபை எத்தனை உள்ளமைப்புகளைக் கொண்டது? 6
14. ஐ.நா சபையின் உள்ளமைப்புகள் யாவை? 1. பொதுச்சபை 2.பாதுகாப்புச்சபை 3.பொருளாதார சமூகசபை 4. பொறுப்பாண்மைக்குழு 5. பன்னாட்டு நீதிமன்றம் 6. செயலகம்
15. ஐ.நா பொதுசபை (General Assembly) எங்குள்ளது? நியூயார்க்
16 ஐ.நா. பொதுச்சபையில் ஒரு நாட்டுக்கு எத்தனை வாக்குகள் உண்டு? ஒரு வாக்கு மட்டும் தான் (5பிரதிநிதிகள் கலந்துகொள்ளலாம்)
17. ஐ.நா. பொதுச்சபையில் எதைப் பற்றி விவாதிக்கலாம்? ஐ.நா. சார்ட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி (பாதுகாப்பு சபை கையாளும் விசயங்கள் தவிர்த்து)
18 ஐ.நா பொதுச்சபையின் பணிகள் என்ன? ஐ.நா.பட்ஜெட்டை கையாளுவது, பாதுகாப்பு சபையின் சிபாரிசின் அடிப்படையில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, சமூகப் பொருளாதாரச் சபைக்கான தற்காலிக உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாண்மைக் குழுவுக்கான நிரந்தர உறுப்பினர்களைத் தேர்வு செய்வது போன்றவை.
19 ஐ.நா பொதுச்சபை வருடத்திற்கு எத்தனை முறை கூடுகிறது? 2 முறை
20 ஐ.நா சபையின் மகாநாடு எப்போது நடைபெறும்? ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமை
21. ஐ.நா சபையின் பொதுச்சபையின் செயலரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டுகள்? 5 ஆண்டுகள்
22 ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
23 சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளை யார் தேர்ந்தெடுப்பது? ஐ.நா. பாதுகாப்புசபை (Security Council)
24 சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை கண்காணிப்பது யார்? ஐ.நா. பாதுகாப்புசபை
25 ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எத்தனை நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன? 5நாடுகள்
26 ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் எவை? சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
27 ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது யார்? ஐ.நா. பொதுச்சபை
28 ஐ.நா. பாதுகாப்புச்சபையில் தற்காலிக உறுப்பினராக, இந்தியா எந்தெந்த ஆண்டுகளில் இருந்தது? 1951-1952, 1967-1968, 1977-1978, 1991-1992
29 ஐ.நா. பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று எந்த முக்கிய நாடுகள் கோரி வருகிறது? இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் இன்னும் பிற நாடுகள்.
30 ஐ.நா. பொருளாதார (Economic & Social Council) தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
31 ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 3 ஆண்டுகள்
32 ஐ.நா. பாதுகாப்புச்சபையின் தற்காலிக உறுப்பினரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டு? 1 ஆண்டு
33 ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? பொதுச்சபையால். (மூன்றில் இரண்டு பங்கு வாக்கு பெரும்பான்மையில்)
34 ஐ.நா. பொருளாதார சமூகச்சபை எத்தனை பிரதிநிதிகளை கொண்டது? 54உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள்
35 ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் பணிகள் என்ன? பன்னாட்டு பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம்.
36 ஐ.நா. பொறுப்பாண்மைக் குழுவின் (Trusteeship Council) தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
37 ஐ.நா.பொறுப்பாண்மைக்குழுவின் உறுப்பினர்கள் யார்? சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
38 ஐ.நா.பொறுப்பாண்மைக்குழு எதற்கு அமைக்கப்பட்டது? சுயஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனைப் பாதுகாக்க அமைக்கப்பட்டது.
39 ஐ.நா.பொறுப்பாண்மைக் குழுவின் தலைமைப் பதவி எந்த நாட்டிடம் உள்ளது? ஒவ்வொரு நாடும் ஒரு வருடம் மட்டும் என்ற சுழற்சி முறையில் (5 நாடுகள் மட்டும்)
40 ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றம் எங்குள்ளது? International Court of Justice திஹேக், நெதர்லாந்து
41 ஐ.நா.சபையின் சர்வதேச நீதிமன்றத்திற்கு எந்தெந்த நாடுகள் கட்டுப்பட்டவை? ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும்.
42 ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் பணிபுரிகின்றனர்? 15
43 ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 9 வருடங்கள்
44 ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்திற்கு ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சம் எத்தனை நீதிபதிகளை தேர்வு செய்யலாம்? ஒன்று
45 ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் அலுவல் மொழி எது? ஆங்கிலம், பிரெஞ்சு
46 ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய (2015) தலைவர் யார்? பீட்டர் தோம்கா (ஸ்லோவாகியா)
47 ஐ.நா சபையின் செயலகம் முதன்முதலில் எங்கிருந்தது? லண்டனில் இருந்தது.
48 ஐ.நா சபையின் செயலகம் தற்போது எங்குள்ளது? நியூயார்க்
49 ஐ.நாவின் முக்கிய அமைப்பு எது? ஐ.நா. செயலகம் (Secreteriate)
50 ஐ.நாவின் பொதுச்செயலாளரை எவ்வாறு தேர்ந்தெடுப்பர்? ஐ.நா.பாதுகாப்பு சபையின் சிபாரிசுப்படி பொதுச்சபை நியமிக்கும்