மதத்தை சார்ந்த 10 குருக்கள் பற்றிய சில தகவல்கள்
1. குரு நானக்
2. குரு அங்காத்
3. குரு அமர்தாஸ்
4. குரு ராம்தாஸ்
5. குரு அர்ஜுன் தேவ்
6. குரு ஹரிகோவிந்த்
7. குரு ஹர்ராய்
8. குரு ஹர்கிருஷ்னா
9. குரு தேஜ்பகதூர்
10. குரு கோவிந்த் சிங்
1. குரு நானக்:-
இவர் பிறந்த ஊர் - லாகூர் அருகில் தால்வண்டி
இவர் தொடக்கத்தில் கபீரின் சீடராக இருந்தார்.
இவர் தோற்றுவித்த சமயம் சீக்கிய சமயம்
அசுத்தங்கள் நிறைந்த இவ்வுலகில் சுத்தமாக இருங்கள் என்பது இவரின் புகழ்மிக்க வாசங்களில் ஒன்றாகும்.
இவர் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தார்.
இவர் தனது 29 வயதில் தன் வீட்டை துறந்து துறவியானார்.
மெக்கா, மெதினா போன்ற புண்ணியத் தலங்களுக்கு சென்றார்.
இவர் பல நாடுகளுக்கு சென்று உபதேசித்து கடைசியில் கார்த்பூர் என்னும் இடத்தில் வசிக்கலானர்.
எல்லா சமயத்தினரும் அனைத்து பிரிவினரும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்ளும் *லாங்கர்* எனும் சம்பந்தி உணவுக்கூடம் அமைத்தார்.
இவர் போதைனைகள் பாடல் வடிவில் அமைந்திருந்தன. அவை ஆதிகிரந்த் எனும் நூலாகத் தொகுக்கப்பட்டது.
ஆதிகிரந்த் எனும் நூலை குர்முகி எழுத்து முறையில் எழுதப்பட்டது.
சீக்கியரின் புனித நூல் - குரு கிரந்த சாஹிப்
2. குரு அங்காத்:-
இவர் குருநானக் சீடர் ஆவார்.
இவர் குருமுகி அகரவரிசையைப் அறிமுக படுத்தினார்.
குருநானக் வரலாறு இவரால் எழுதப்பட்டது.
3. குரு அமர்தாஸ்:-
இவர் சீக்கிய சமய கொள்கையை பின்பற்றுவோர் வாழ்ந்த பகுதிகளை 22 பிரிவுகளாக பிரித்தார்
22 பிரிவுகளை மஞ்சுகள் அல்லது திருமண்டலங்கள் என அழைக்கப்பட்டது.
4. குரு ராமதாஸ்:-
இவர் குரு அமர்தாஸ் மகன்.
இவருக்கு அக்பர் 500 பிதுக்கள் நிலம் கொடுத்தார்.
அமர்தசரஸ் கோவில் கட்டப்பட்டது.
இவர் குருவை கடவுளின் அவதாரமாக நம்பினர்.
5. குரு அர்ஜுன் தேவ்:-
குரு அர்ஜுன் தேவ் குருவாக வருவதற்கு அவருடைய சகோதரர் பிருதிவி சந்தி புரட்சி செய்தபோதிலும் தோல்வியில் முடிந்தது.
ஆதிகிரந்தம் நூல் தொகுக்கப்பட்டது
ஆதிகிரந்தம் வேறுபெயர் குரு கிரந்த சாஹிப் என அழைக்கப்பட்டது.
இவருக்கு அர்ஜுன் சிங் பண உதவி மூலம் தன் ஆதரவை குஸ்ருவிற்கு அளித்ததை காரணம் காட்டி அவர்மீது இராஜத்துரோகம் குற்றம் சாட்டி, அவரை ஜகாங்கீர் ஆல் சிறை செய்து கொலை செய்யப்பட்டார்.
குஸ்ரு ஜகாங்கீர் மகன் ஆவார்.