INDIAN RIVERS INFORMATION

 இந்திய வடிகாலமைப்பு
* பொதுவாக இந்தியாவில் பாயும் ஆறுகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். அவை: 1. வடஇந்திய ாறுகள் 2. தென்னிந்திய ஆறுகள் அல்லது தீபகற்ப ஆறுகள்.
வடஇந்திய ஆறுகள்
* வடஇந்திய ஆறுகளில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் அடங்கி உள்ளன.
* வட இந்திய ஆறுகள் தென்மேற்குப் பருவக்காற்று மழை மற்றும் பனி உருகி வரும் நீரால் ஆண்டு முழுவதும் வெள்ளம் கொண்டவை. இவ்வாறுகள் நீர் மின்
உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இவை உள்னாட்டு நீர் வழிப் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன.
சிந்து
* உலகின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றாகும். 2900 கிமீட்டர் நீளமுடையது. இதில் 709 கிமீ இந்தியாவில் உள்ளது.
* இவை இமயமலையில் உள்ள கயிலைக்குன்றுப் பகுதியில் அமைந்த மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி, பஞ்சாப் வழியாகப் பாய்ந்து, பிறகு பாகிஸ்தான் பகுதியில்
நுழைந்து அரபிக்கடலில் கலக்கிறது. இதன் பெரும்பகுதி பாகிஸ்தானில் உள்ளது.
* ஜீலம் , சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகள் சிந்துவின் துணையாறுகள் ஆகும் .இவற்றில்ஜீலம், சீனாப் மற்றும் சிந்து ஆகிய பாகிஸ்தானில் பாய்கிறது.
* இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்குமிடையில் 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகளின் நீரை வரம்பின்றி
இந்தியா பயன்படுத்தும் அதிகாரம் பெற்றது.
* பிற இரு துணையாறுகளின் நீர் பயனாக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது.
* சிந்து நதியால் நமக்குக் கிடைக்கும் நீர் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் நீர்ப்பாசனத்திற்கும், மின்சக்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
* சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும்
பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே நம் பாரதம் இந்திய என்று பெயர் பெற்றது. (ஃஇந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்)
கங்கை
* இந்தியாவின் புனித நதி கங்கை. இவை இமயமலையில் உள்ள கங்கோத்ரி என்ற பனியாற்றில் உற்பத்தி ஆகிறது. இந்த ஆற்றின் நீளம் சுமார் 2510 கிமீ ஆகும்.
* இவை உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் வழியாக பாய்ந்து செல்கிறது. இந்தியப் பரப்பின் 25 சதவீதம் கங்கை நதியின் பரப்பே ஆகும்.
* இமயமலைகளில் அலக்நந்தா மற்றும் பாகீரதி என்னும் இரு தலைப்பிரிவுகளாக உருவாகிறது.
* கங்கையின் முக்கியத் துணையாறு யமுனை. இவை கங்கையுடன் கலக்குமிடம் அலகாபாத்தில் உள்ள பிரயாகை ஆகும்.
* ராம்கங்கா, காக்ரா, கண்டக், பாக்மதி, கோசி, சாரதா, சம்பல், கோமதி, ஹூக்ளி ஆகியவை கங்கையின் துணையாறுகள் ஆகும்.
* ஹரித்துவார், கான்பூர், அலகாபாத், வாரணாசி, பாட்னா, கொல்கத்தா ஆகியன கங்கையின் மீது அமைந்துள்ள முக்கிய நகரங்களாகும்.
* கங்கை தனது கழிமுகப்பகுதியில் பல பிரிவுகளாகப் பிரிந்து சுந்தர்பன் டெல்டாவை உருவாக்கிய பின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
* வங்கதேசத்தில் கங்கை பத்மா என அழைக்கப்படுகிறது.
* கங்கை நதியைப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் 1995ல் தேசிய நதி பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1995ல் மத்திய கங்கை நதி அமைப்பும் நிறுவப்பட்டது.
பிரம்மபுத்திரா
* இவை கயிலைக்குன்றுகளில் அமைந்த மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி கிழக்காக திபெத்தில் ஸாங்போ என்ற பெயருடன் இந்தியா மற்றும் லங்காளதேசம் ஆகிய
நாடுகளில் பாய்கிறது. இவை 2880 கிமீ நீளமுடையது.
* அருணாச்சலப் பிரதேசத்தில் திஹாங் என்ற பெயருடன் நுழைகிறது.
* அஸ்ஸாமில் பெரும்பாலான போக்குவரத்து பிரம்மபுத்திரா ஆற்றின் மூலமாகவே நடைபெறுகின்றன.
* பிரம்மபுத்திரா, பங்களாதேஷில் பத்மா ஆற்றுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கிய பின் வங்காளா விரிகுடாவில் கலக்கிறது.
* வங்களாத்தில் ஜமூனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது
 கோதாவரி
* தென்னிந்திய ஆறுகளின் மிகப்பெரிய ஆறு கோதாவரி ஆகும் இந்திய நிலப்பகுதியில் 10 சதவீதம் இதன் பரப்பாகும்.
* 1440 கிமீ நீளமுள்ள இந்த ஆறு மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் பகுதியில் இருந்து உற்பத்தியாகி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மஞ்சிரா, பென்கங்கா, வெயின்கங்கா,
இந்திராவதி, வார்தா ஆகியன இதன் துணை ஆறுகள் ஆகும். தட்சிண கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.