TNPSC IMPORTANT POINTS

 உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஆங்கிலேய ஆட்சியாளர் - ரிப்பன் பிரபு.
• ஊராட்சி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகள்: தெருவிளக்குகள் அமைத்தல், ஊர்ச்சாலைகள் அமைத்தல், கிணறு தோண்டுதல், கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல், சிறிய
பாலங்கள் கட்டுதல், வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல், கிராம நூலகங்களைப் பராமரித்தல், தொகுப்பு வீடுகள் கட்டுதல், இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன.
• ஊராட்சி ஒன்றியத்தில் எத்தனை மக்களுக்கு ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுகிறார் - ஐந்தாயிரம் மக்கள் தொகை.
• ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடுகின்றன.
• ஊர் மன்றக் கூட்டங்கள் நடைபெறும் பொதுவான நாட்கள்: ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2.
• ஊராட்சி ஒன்றியங்கள் செய்யும் பணிகள்: ஊராட்சி ஒன்றியச் சாலைகளைப் பராமரித்தல், குடிநீர் வழங்குதல், ஊரக மருத்துவமனைகளை ஏற்படுத்துதல், தொடக்கப் பள்ளிக் கட்டடங்களைப் பழுதுபார்த்தல், தாய் - சேய் நல விடுதிகளை நடத்துதல், பொதுச் சந்தைகளை ஏற்படுத்துதல், கால்நடை மருந்தகங்களை ஏற்படுத்துதல், வேளாண்மைக் கருவிகள், உரங்கள் போன்றவற்றை வழங்கல், சமூகக் காடுகளை வளர்த்தல்.
• மாவட்ட ஊராட்சியின் கடமைகள்: மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்கள், மாவட்டச் சாலைகளின் மேம்பாடு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குதல், வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணித்தல்.
• பத்தாயிரம் மக்கள் தொகைக்கு மேலுள்ள ஊராட்சிகள் - பேரூராட்சிகள் எனப்படும்.
• ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் நகராட்சி எனப்படும்.
• பல லட்சம் மக்கள் தொகையும், பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ள பகுதி - மாநகராட்சிகள்.