சிக்கிம் மாநிலத்தில் சிறப்பு FOR RRB GROUP D AND TNPSC GROUP 2 QUESTIONS

 சிக்கிம் மாநிலத்தில் இவ்வளவு சிறப்புகளா?

🗼 இந்தியாவின் 22 வது மாநிலமாக சிக்கிம் 1975ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
🗼 சிக்கிமின் தலைநகரம் காங்க்டாக் ஆகும்.
🗼 சர்வதேச மலர் விழா, கோடை காலத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை சிக்கிமில் நடைபெறுகிறது.
🗼 சிக்கிம் நகரின் புகழ் பெற்ற சுற்றுலாத்தளம் சித்தேஷ்வர் தாம் ஆகும்.
🗼 உலகின் மூன்றாவது உயர்ந்த மலை சிக்கிமில் உள்ள கஞ்சன்ஜங்கா மலை ஆகும்.
🗼 பெல்லிங்கில் உள்ள சிங்ஷோர் பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொங்கும் பாலம் ஆகும்.
🗼 யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் 2016 ஆம் ஆண்டு, கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா இந்தியாவின் முதல் கலப்பு உலக பாரம்பரிய தளமாக பதிவு செய்யப்பட்டது.
🗼 சிக்கிம், 7096 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலமாகும்.
🗼 சிக்கிமில் உள்ள பாபா மந்திர் ஒரு இந்திய ராணுவ வீரரை கௌரவிக்க கட்டப்பட்டுள்ளது.