GROUP 2 IMPORTANT GK AND GENERAL TAMIL QUESTION AND ANSWERS 2108


*பொதுதமிழ் (ம)பொதுஅறிவு*

1. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

A)வீரச்சிறுவன்
B)தேசிய மடல்
C)இசையமுது
D)பாரததேசம்

2. வீரச்சிறுவன் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A)வாணிதாசன்
B)கண்ணதாசன்
C)பாரதிதாசன்
D)ஜானகி மணாளன்

3. சடகோ சகாகி எந்த நாட்டு சிறுமி

A)அமெரிக்கா
B)ஜப்பான்
C)இங்கிலாந்து
D)ஜெர்மனி

4. இவற்றுள் எது சரி?
I. தன் எழுத்து மட்டும் சேரும் எழுத்து உடன்நிலை மெய்மயக்கம்
II. தன் எழுத்துடன் சேராது வேறு எழுத்துடன் சேருவது வேற்றுநிலை மெய்மயக்கம்

A)I சரி, II தவறு
B)I, II சரி
C)I தவறு, II சரி
D)I, II தவறு

5. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

A)1974
B)1971
C)1970
D)1972

6. கீழ்க்கண்டவற்றில் வள்ளலார் எழுதிய நூல் எது?

A)ஜீவகாருண்ய ஒழுக்கம்
B)மனுமுறை கண்ட வாசகம்
C)திருவருட்பா
D)அனைத்தும்

7. தாளில் எழுதாமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிறப் பாட்டு, எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதை இவற்றை ---------- என்று கூறுவர்.

A)நாட்டுப்புற இலக்கியம்
B)வாய்மொழி இலக்கியம்
C)நாட்டுப்புறப் பாடல்
D)கானாப் பாட்டு

8. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் - இடம் பெற்றுள்ள பாடல்

A)நாலடியார்
B)திருக்குறள்
C)பழமொழி
D)முதுமொழிக்காஞ்சி

9. ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா - எக்காலத்தில் உருவான நாட்டுப்புறப்பாட்டு

A)சங்க காலம்
B)விடுதலை போராட்ட காலம்
C)மன்னர் காலம்
D)நவீன காலம்

10. உலகம் வெப்பமடையக் காரணம் ...............

A)வாகனப்புகை
B)வெயில்
C)எரிமலைக்குழம்பு
D)தொழிற்சாலை

11. இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் ______ எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

A)திருவருட்பா
B)மருட்பா
C)வள்ளலார் பாடல்கள்
D)அருட்பெருஞ்சோதி

12. திருவள்ளுவரின் வேறு பெயர்களில் பொருந்தாதது எது?

A)செந்நாப்போதார்
B)தெய்வப்புலவர்
C)தேவர்
D)குடமுனி

13. திருக்குறளின் வேறு பெயர்களில் பொருந்தாதது எது?

A)முப்பால்
B)பொதுமறை
C)தமிழ்மறை
D)ஆன்ற தமிழ்மறை

14. 2018 -ன் திருவள்ளுவர் ஆண்டு?

A)2047
B)2046
C)2050
D)2049

15. ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்களில் பொருந்தாதது எது?

A)அரசு ஆவணக் காப்பகம், சென்னை
B)சரசுவதி நூலகம், தஞ்சாவூர்
C)கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், தஞ்சாவூர்
D)உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
16. பண்டைய தமிழக மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சிச்சிறப்பு, கல்விப்பெருமை போன்றவற்றை எப்பாடல் மூலம் அறியலாம்.

A)அகநானூறு
B)புறநானூறு
C)ஐங்குறுநூறு
D)கலித்தொகை

17. அறம் பெருகும் தமிழ்படித்தால், அகத்தில் ஒளிபெருகும் - என்று பாடியவர் யார்?

A)உ.வே.சா
B)பெருஞ்சித்திரனார்
C)மீனாட்சி சுந்தரனார்
D)திரு.வி.க

18. தேடு புகழான் திருமலைரா யன்வரையில் ஆடுபரி காவிரியா மோ - இப்பாடலைப் பாடியவர்?

A)ஔவையார்
B)மோசிகீரனார்
C)பூதஞ்சேந்தனார்
D)காளமேகப்புலவர்

19. எந்த ஆண்டு பேராசிரியர் இராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு சென்னையில் அமைக்கப்பட்டது?

A)1970
B)1971
C)1972
D)1973

20. கற்போரின் குற்றங்களை நீக்கி,அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும் நூல் எது?

A)திருக்குறள்
B)சிலப்பதிகாரம்
C)புறநானூறு
D)முதுமொழிக்காஞ்சி

21. ஊருக்குக் கிழக்கே எழுந்த ஊர்ப்பகுதியை எவ்வாறு அழைப்பர்?

A)வடபழஞ்சி
B)தென்பழஞ்சி
C)மேலூர்
D)கீழூர்

22. அகம் - என்பதன் பொருள்?

A)உடல்
B)உள்ளம்
C)வெளியே
D)அறம்

23. பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி - இப்பாடல் வரியில் பண் என்பதன் பொருள்?

A)இசை
B)கொடை
C)வசை
D)இனிமை

24. பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் என்னும் ஊர் உள்ள மாவட்டம் ______

A)மதுரை
B)ராமநாதபுரம்
C)சிவகங்கை
D)திருநெல்வேலி

25. நடுவணரசு எந்த வருடம் ராமானுஜரின் அஞ்சல் தலையை வெளியிட்டது?

A)1962
B)1990
C)2006
D)1978