Smart Works to get job in TNPSC

1.use shortcuts,
இந்த முறையில் படிக்கும் எளிதாக மனதில் பதியும், எப்பவும் மறக்காது...
2. பாடத்திட்டத்தினை ஒப்பிட்டு படித்தல். முழு புத்தக்த்தையும் படிக்காமல் அந்த தேர்வுக்கான படத்திட்டத்தினை ஒப்பிட்டு படித்தல் நலம்..
3.திரும்ப திரும்ப படித்தல் நலம் பயக்கும்... எளிதில் மறக்காது...
4. அட்டவனையிட்டு படித்தல்... அக்காலத்திற்குள் அப்பகுதியினை படித்தல் வேண்டும்...
5. படிக்கும்போது மற்ற பொழுதுபோக்கு தவிர்த்தல்.. முக்கியமாக அலைப்பேசியை அனைத்தல் நலம்...
6. படிக்கும்போது வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் கொடுக்ககூடாது... முழு மனதோடு படிக்கவேண்டும்...
7. அதிகாலை நேரங்களில் படிப்பது எளிதில் மனதில் பதியும்...
8. சுய தேடல் வேண்டும். பாடம் தொடர்பான சந்தேகம் எழுந்தால் உடனே இனைத்தில் தேடி அதன் விபரங்களை அறியும் எண்ணம் வேண்டும்...
9.எவ்வளவு படித்தாலும், எப்படி படித்தாலும் படிப்பவற்றை ஈடுபாடோடு படிக்க வேண்டும். தேர்வு என்பதை கடந்து படிக்க வேண்டும். புத்திசாலித்தனமாக திட்டமிட்டு படிக்க வேண்டும். பிராகடிக்கலாக நீங்கள் படிப்பதை ஒப்பீடு செய்து படியுங்கள். 
10.போட்டி  தேர்வை பொருத்தவரை வருத்தி படிப்பதைவிட விரும்பி படிக்க வேண்டும். படித்தவற்றை பரிசோதித்து பார்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு தனிமனித வருமானம் பற்றி படிக்கிறீர்கள் என்றால் அதை நடைமுறையில் உங்கள் குடும்ப மற்றும் சுற்றாத்தார் வருமானம் குறித்து ஒப்பீடு செய்ய வேண்டும்.
நாட்டு வருமானம் படிக்கிறீர்கள் என்றால் அது குறித்த கணக்கீடுகளை மக்களோடு அப்ளை செய்து பார்க்க வேண்டும்.
அடிப்படை உரிமை, கடமைகள் பற்றி படிக்கின்றீர்கள் என்றால் அதனை எவ்வாறு நடைமுறையில் நாம் கடைப்பிடிக்கின்றோம். எவ்வாறு உங்கள் படிப்பு திட்டங்கள் இருக்க வேண்டும், என்ற சுமார்ட்டாக சிந்திக்க தெரிந்தால் நீங்கள்தான் சாம்பியன்.
11. மொழிக்கு அதிக முக்கியதுவம் கொடுங்கள்.... தமிழ்/ஆங்கிலம் ஏதோ ஒன்று நிச்சியம்... எனவே இதில் 90  மதிப்பெண் வாங்குவது இலட்சியம்... ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர், மொழியறிவு நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் மிக அவசியம். ஏனென்றால் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில்தான் கேள்விகள் கேட்கப்படும். குறிப்பாக மொழிப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. 
12. சந்தையில் போட்டித் தேர்வுகளுக்கென ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்கப்படுகின்றன.  போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளோ, மெட்டீரியல்களோ வெறும் வழிகாட்டியே தவிர, கேள்வி&பதில்களை அடிக்கடி நீங்களே தயாரித்து அதற்கான மாதிரி தேர்வுகளை நீங்களே எழுதிப் பார்க்கலாம். 
13.குழுவோடு இணைந்து படிக்கும் பொழுது மற்றவர்கள் மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். உங்களின் + மற்றும் - தெரிய வரும்.
14. தன்னம்பிக்கை.. இத்தனை லட்சம் பேர் எழுதுகிறார்கள். இவர்களில் நாம் எப்படி எழுதி வெற்றி பெற முடியும் என்கிற பயம் பலருக்கு இருக்கும். எத்தனை லட்சம் பேர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தாலும், கடினமாக உழைக்கக் கூடியவர்கள் அதில் 10 % பேர்தான். குழுவாக படிப்பதுதான் போட்டித் தேர்வுக்கான ஆரோக்கிய படிப்பாகும். 
15.பொருளாதார சூழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியை தடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம்  தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்'.