சி.சு.செல்லப்பா  TNPSC GENERAL TAMIL ABOUT CHELLAPPPA

TNPSC ABOUT CHELLAPPA 
CHELLAPPA HISTORY FOR TNPSC 

சி.சு.செல்லப்பா
சி.சு.செல்லப்பா அவர்கள் 29.09.1912ல் சின்னமனுரில் பிறந்தார்.

சுதந்திர சங்கு என்னும் இதழ்க்கு கவிதை எழுதினார்.

இவர் எழுதிய சரசாவின் பொம்மை சிறுகதையின் மூலம் சிறந்த எழுத்தாளர் என்னும் தகுதியை பெற்றார்.

எழுத்து என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் இவர்.

தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி எழுத்து (1958)

இந்த இதழை தொடங்கியது முதல் 1970 ஆம் ஆண்டு வரை 119 இதழ்களை இவர் வெளியிட்டார்.

விமர்சக எழுத்தாளராக :
சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிக்கைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த எழுத்து என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த எழுத்து காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது.

சிறுகதைத் தொகுதிகள் :
➦ சரஸாவின் பொம்மை
➦ மணல் வீடு
➦ சி. சு. செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள்
குறும் புதினம் :
➦ வாடி வாசல்
புதினம் :
➦ ஜீவனாம்சம்
➦ சுதந்திர தாகம்
நாடகம் :
➦ முறைப்பெண்
கவிதைத் தொகுதி :
➦ மாற்று இதயம்
குறுங்காப்பியம் :
➦ இன்று நீ இருந்தால்
➦ 2000வரிகளைக் கொண்ட நெடுங்கவிதையில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் இந்நு}ல் எழுத்து ஏட்டின் 114ஆவது இதழில் வெளிவந்தது.
திறனாய்வு :

ந. பிச்சமூர்த்தி கதையைப் பற்றிய கருத்து

பி.எஸ்.இராமையாவின் சிறுகதைப் பாணி

 எனது சிறுகதைகள்

 இலக்கியத் திறனாய்வு

 மணிக்கொடி எழுத்தாளர்கள்

மறைவு :

சி.சு.செல்லப்பா, 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மறைந்தார்.

விருதுகள் :

இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது

No comments:

Post a Comment