இவர் சுதந்திரனந்தா என்ற புனைப்பெயர் சூட்டிக் கொண்டார்.
இவர் வ.உ.சி.யுடன் தமிழ் நாட்டில் இரட்டை யராக திகழ்ந்தார்கள்
பிபின் சந்திர பாலர் விடுதலை நாளை மீறி தாமிரபரணி பொது கூட்டத்தில் பேசியதற்காக வ.உ.சி. மற்றும் இவரும் கைது செய்யப்படும் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்
திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிவா தொழுநோயால் பாதிக்கப்பட்டார்.
சிறையில் இருந்த விடுதலையான சிவா தரும்புரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் 'பாரதி ஆசிரமம் என்ற பெயரால் தேச பக்தர்களின் பாசறை ஒன்றை நிறுவினார்.
இளம் தேசாபிமானிகளுக்கு நாட்டு விடுதலைப் போருக்காக பயிற்சி அளித்தார்.
சிவாஜி, தேசிங்கு ராஜா ஆகிய மாவீரர்களின் வரலாற்றை நாடகங்களாக்கினார்.
அரசுக்கெதிராக செயல்பட்ட சிவா மீது நான்கு முறை (1908, 1921, 1922, 1924) குற்றம் சாட்டி வழக்கு தொடுத்து தண்டித்தது.