ஒரு ஜெராக்ஸ் கடையில் ஒரு போட்டித் தேர்வாளர் பல்வேறு தளத்தில் இருந்தும் பல பயிற்சி மையங்களில் இருந்தும் பல Materials-களை நகலடுத்து கொண்டிருந்தார். உண்மையில் இதை அவர் படித்து முடிக்கவே One Decade ஆகும் போல தோன்றியது.
பொதுவாக ஒரு பயிற்சி மையத்தில் ரொம்ப கச்சிதமாக ஒரு மெட்ரியல் போட்டிருப்பார்கள். ஆனால் அங்கு படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர் அதை படிக்காமல் மற்ற பயிற்சி மையங்களில் உள்ள Materials-களை நகலடுத்துக் கொண்டிருப்பார்கள். தேர்வு நெருங்க நெருங்க இந்த நகலடுக்கும் பணிகள் அதிகமாகிக் கொண்டே செல்லும். இது போன்றவைகள் தான் Pre-Exam Syndrome.
ஒரு சிலர் கடந்த 4 மாதங்களில் மிக நன்றாக படித்திருப்பார்கள். ஆனால் எக்சாம் நெருங்க நெருங்க எதுவும் படிக்காத மாதிரி ஒரு Feel (Fear) உண்டாகி விடும். Negative Thoughts-ம், Restless தன்மையும் இயல்பாகி இருக்கும். But It is Natural. இதை உணர்ந்து கொஞ்சம் ரிலாக்சாக படித்து, தேர்வை மட்டும் 3 மணி நேரம் சரியாக கையாண்டாலே போதும். அதை விடுத்து தூங்காமல் ரொம்ப Strain எடுத்து படித்தால் தலைவலி தான் உண்டாகும். அதுவே இயல்பாகி விடவும் வாய்ப்புண்டு. பின் நீங்கள் நல்ல வேலைக்கு சென்றாலும் கூட அந்த தலைவலியை மட்டுப்படுத்துவது கடினம்.
இது ஏற்கனவே நன்றாக எச்காமுக்கு தயாரானவர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் 7 மணி நேரம் தூக்கம் தவிர்த்து மற்ற நேரங்களில் கொஞ்சம் சிரமம் எடுத்து தமிழ், ஆப்டியூட், நடப்பு நிகழ்வுகள், அரசியலமைப்பு, உயிரியியல் என இந்த ஆர்டரில் முக்கித்துவம் கொடுத்து படிக்கலாம்.
இங்கே மிக முக்கியமானவர்களை பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் படித்துக் கொண்டிருப்பவர்கள் பற்றி. பொதுவாக நாம் தேர்வுக்கு தயாராகும்போது ஆரம்பக் கால கட்டத்தில் ஒரு வித passion ஆக படிப்போம். மாதங்கள் செல்லச் செல்ல அந்த ஆர்வம் குறைந்து கொண்டே வரும். போதாதற்கு தேர்வில் தகுதி காண் வராது போகும் போது இன்னும் அதிகமாகும். இறுதியில ஒரு சோர்வுத் தன்மை வந்து ஒரு விட்டேத்தியான மனநிலையில் நாட்களை கடத்திக்கொண்டிருப்போம். தேர்வு பற்றி பிரக்ஞை இல்லாமலே. ஆனால் அதில் இருந்து கொண்டே.
இதைத்தான் Mental menopause என்பார்கள்.இதுக்கு ஒரே தீர்வு தேர்வை ஒரு வித ஊக்கத்தோடு சந்திக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேர்வு முடிவுகள் என்னவாயிருந்தும் அதைப் பற்றி கவனம் கொள்ளக் கூடாது. உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள். உற்சாகம் தரும் இசையை கேளுங்கள். மாலைகளில் உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள். இல்லையென்றால் ஏதாவது ஒரு திடலில் ஒரு 2.5 கிலோ மீட்டர் ரன்னிங் ஒடுங்கள். உங்கள் வயதை பற்றி பிரக்ஞை கொள்ளாமல் உங்கள் Nostalgia நினைவுகளை அசை போடுங்கள். இந்த வருடம் நல்ல வேலைக்கு செல்வோம் என்ற நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக அதுவே உங்களுக்கு நல்ல வேலையை பெற்றுத் தரும்.-