ஆர்.டி. பிர்லா விருது மருத்துவ அறிவியல் துறையில் வழங்கப்படுகிறது.
வியாஸ் சம்மான் விருது ஹிந்தி இலக்கியத்திற்கான சிறந்த பங்களிப்பிற்கு வழங்கப்படுகிறது.
பல்வேறு வகையான விளையாட்டுகளில் சிறந்த சாதனை புரிவதற்காக அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
துரோணாச்சார்யா விருது விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது இந்திய விஞ்ஞானிகளுக்கு அவர்களின் அபாரமன செயல்திறனுக்காக வழங்கப்படுகிறது.
பாரத ரத்னா இந்தியாவின் மிக உயரிய விருது ஆகும்.
பாரதீய ஞானபீட விருது அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் புகழ்பெற்ற படைப்புக்களுக்காக அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பரம் வீர் சக்ரா விருது துணிச்சலுக்கான மிக உயரிய விருது ஆகும்.
தனிச்சிறப்பு வாய்ந்த சாதனைக்காக, தனிப்பட்ட பெண்களுக்கு ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கர் விருது வழங்கப்படுகிறது.
ஹாக்கி வீரரான தியான் சந்த் நினைவாக விளையாட்டுகளில் வாழ்நாள் ச��